image description
# 333512
USD 15.00 (No Stock)

ஆனைமலைக் காடர்கள்=āṇaimalaik kāṭarkaḷ

Author :  ஜெ. ஆர். இலட்சுமி=jē. ār. Ilaṭcumi

Product Details

Country
India
Publisher
மதன்மோனிகா பதிப்பகம்=mataṇ mōṇikā patippakam,சென்னை= Ceṇṇai
ISBN 9788192338576
Format PaperBack
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 164 p. ; ills.col. ; 22 cm.
Product Weight 270 gms.
Shipping Charges(USD)

Product Description

உலகில் மிகவும் தொன்மையானவர்கள் என்று கருதப்படும் ஆதிகுடியினர் இன்றும் காடுகளில் மலைவாழ் மக்களாகவே வசித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆனை மலையில் வாழும் காடர்கள் இன்றைய நாகரிகம் வளர்ந்த நிலையிலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்கின்றனர். அவர்களின் வரலாறும் தொன்மையும் வாய்மொழிச் சான்றுகளாகவே உள்ளன. சுதந்திர இந்தியாவில், இன்னும் சுதந்திரம் அடையாதவர்களாக வாழும் காடர்களின் வாழ்க்கையை களஆய்வு செய்து உணர்வுபூர்வமாகப் படைக்கப்பட்ட நுால் இது. ஜவ்வாது மலைப்பழங்குடி மக்கள் வாழ்வியல், வால்பாறைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் போன்ற வனம் சார்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளைக் களஆய்வு செய்து நுாலாக்கியதைத் தொடர்ந்து, ஆனைமலைக் காடர்கள் வாழ்க்கையை அரிய தகவல்களோடு அத்தியாயப்படுத்தி பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர், முனைவர் ஜெ.ஆர்.லட்சுமி. பழங்குடிகளில் தொன்மையானவர்கள் என்று கூறப்படும், ‘ஆதிக்குடி’ தென்னிந்தியக் காடுகளில் வேட்டையாடி வாழ்கின்றனர். ஆனைமலைக் காடர் கள், வடகேரளத்து குகைகளில் வாழ்ந்த சோளநாயக்கன் பிரிவினர், குகைவாசிகள் மற்றும் ஆலார் வகையினர், ஆந்திரப்பகுதிகளில் செஞ்சுக்கள் போன்றோர் தொன்மைக்கூறுகள் கொண்டவர்கள் என்பதையும், இந்தியாவிலேயே மிகப்பழமையானவர்கள் காடர்கள் என்பதையும் அறிய முடிகிறது.

Product added to Cart
Copied