image description
# 531678
USD 4.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

குழந்தைகளின் நூறு மொழிகள் = Kulantaikaḷiṇ Nūru Molikaḷ

Author :  ச. மாடசாமி = Ca. Māṭacāmi

Product Details

Country
India
Publisher
பாரதி புத்தகாலயம், சென்னை = Pārati Puttakālayam, Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Categories கற்றல்
Shipping Charges(USD)

Product Description

அண்மையில் அமெரிக்காவில் ஒரு பொதுப்பள்ளியில் மழலையருக்கான ஒரு வகுப்பறையைப் பார்த்தேன். வகுப்புக்குள் நுழைந்ததும் குழந்தைகள் தங்கள் இருக்கையை நோக்கி ஆர்வமாக விரைந்தார்கள். நான்கு சிறார்க்கு ஒரு மேசை. மேசையில் செயல்பாட்டுக்கான எளிய உபகரணங்கள். போய் உட்கார்ந்தது ஒரு குழந்தை படம் வரைகிறது. ஒரு குழந்தை வர்ணம் தீட்டுகிறது. சும்மா கிறுக்குகிறது ஒரு குழந்தை. புதிர் விளையாட்டில் ஒரு குழந்தை. ஆசிரியரைப் பார்க்கவுமில்லை, தேடவுமில்லை. ஆசிரியையும் இருந்தார். தள்ளி நின்று கவனித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது குழந்தைகளை நெருங்கினார், பாராட்டினார், யோசனைகள் சொன்னார், சட்டென்று விலகிக்கொண்டார். சும்மா நிற்க முடியாதே, ஏதாவது பேச வேண்டுமே! ”குழந்தைகளுக்கு எழுத்து எப்பொழுது கற்றுத்தருவீர்கள்” என்று கேட்டேன். குழந்தைகளின் சித்திர மொழிகளுக்குத்தான் முன்னுரிமை. எழுத்து பின்னர்தான். இது ரெக்கியோ எமிலியா அனுகுமுறை என்றார் ஆசிரியர்.

Product added to Cart
Copied