image description
# 781204
USD 1.00 (No Stock)

படச்சுருள் இதழ்

Author :  பேசாமொழி

Product Details

Country
India
Publisher
பேசாமொழி (pesamoli)
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 54 p
Categories Magazine |பருவ இதழ், Cinema | சினிமா, Monthly Magazines
Shipping Charges(USD)

Product Description

நவம்பர் மாத படச்சுருள் பல முக்கியமான கட்டுரைகளை தாங்கி வெளிவருகிறது. உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்ற ஸ்குவிட் கேம் தொடர் பற்றிய யமுனா ராஜேந்திரன் கட்டுரை அண்மையில் வெளியான ஓடிடி தொடர்கள் பற்றிய ஆகசிறந்த கட்டுரைகளில் ஒன்று. தோழர் முருகவேள் அரசியல் ஆவணப்படங்கள் பற்றிய தொடர் எழுதுகிறார், அவரது தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மாதம் மிக முக்கியமான ஒரு அரசியல் ஆவணப்படம் குறித்து எழுதியிருக்கிறார். சிஐஏ உண்மையில் கலைத்துறையில் என்ன செய்கிறது, வலதுசாரி கலை இலக்கியத்தில் அவர்களது பங்கு என்ன்வாக இருக்கிறது என்று விரிவாக ஆராய்ச்சி மற்றும் ஆதாரப்பூர்வமாக பேசும் படம் குறித்த கட்டுரை தமிழில் மிக முக்கிய முயற்சி. மருத்துவர் விக்ரம் குமார் திரைக்கலைஞர்களுக்கான உணவு முறை பற்றிய தொடர் எழுதிவருகிறார், இந்த மாதம் இயக்குநர்களுக்கான உணவுமுறை பற்றி எழுதியிருக்கிறார். கலை என்றாலும் தொழில் என்றாலும் எல்லாருக்கும் முக்கியமானது உடலும் ஆரோக்கியமும். அதனை பேண வேண்டியதே எலாருடைய முக்கிய கடமையாகும். அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை அது. ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவாளர் வேல்ராஜுடன் நிகழ்த்திய நேர்காணல் தொழில்நுட்ப ரீதியிலும் அழகியல் ரீதியிலும் ஒளிப்பதிவை அணுக சொல்லிக்கொடுக்கிறது. வடசென்னையை காட்சிப்படுத்திய விதம் குறித்தும் பேசியிருப்பவை முக்கியமானது. கருந்தேள் ராஜேஷ் எழுதும் ஷாட் பை ஷாட் தொடர் ஒளிப்பதிவு குறித்த தொழில்நுட்ப ஆதாரம். ஒளிப்பதிவாளர்கள் மட்டுமின்றி இயக்குநர்களும் வாசிக்க வேண்டிய கட்டுரை. சென்னை ஐஐடி பேராசிரியர் திவ்யா தமிழில் வெளியான மதுரை சார்ந்த திரைப்படங்கள் அதில் முக்கியமாக சுப்ரமண்யபுரம் எப்படி ஆணாதிக்க சினிமாவாக இருக்கிறது என்பதை ஆய்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார். எல்லா கட்டுரைகளும் உங்களின் அறிவை விசாலப்படுத்தும். சினிமா பற்றிய மாற்றுப் பார்வையை உருவாக்கும்.

Product added to Cart
Copied