Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2025 |
Categories | Psychology |
Shipping Charges(USD) |
மனம் ஓர் அபார சக்திமிக்கது. அதில் நேர்மறை எண்ணங்களே தோன்றிக்கொண்டிருந்தால் வாழ்வில் ஏற்படும் எந்த சோதனைகளையும் தடைகளையும் கடந்து நிம்மதியான வாழ்வைத் தொடரலாம். அதனால்தான், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்று சொல்லிவைத்தார்கள். நம் வாழ்வில் நம்மைச் சுற்றி நடக்கும் புறச் சம்பவங்கள் நேரடியாகப் பாதிப்பது நம் மனதைத் தான். அப்படிப்பட்ட மனதைப் பக்குவப்படுத்த எத்தனையோ வழிகளை நாடுகிறோம். அந்த வழிகளில் முக்கியமானவையாக யோகா, ஆன்மிகம் போன்றவை திகழ்கின்றன. அந்த வழியில் மனதின் வலிமையையும், அதை எப்படியெல்லாம் செம்மைப்படுத்தினால் நாம் நினைத்ததை அடையலாம் என்பதை விளக்கி, ‘உனக்குள் ஒரு ரகசியம்’ எனும் தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இந்த நூலெங்கும் அன்றாட வாழ்வியல் சம்பவங்களை உதாரணங்களாக எடுத்துச்சொல்லி மனதுக்கு உற்சாகம் பிறக்கவைக்கிறார் குரு மித்ரேஷிவா. உங்களுக்குள்ளிருக்கும் ரகசியத்தை அறிந்து அமைதிக்கான வழியை இனி அறியலாம்.