Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2025 |
Categories | Reference |
Shipping Charges(USD) |
85 வயது கல்வியியல் அறிஞர் மைல்ஸ் ஹார்ட்டன் அவர்களுக்கும், 70 வயது கல்வியியல் அறிஞர் பாவ்லோ பிரெய்ரி அவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலின் பதிவே "We make the Road by Walking" என்ற நூல் என்று அறிந்தவுடன், இரவே படிக்கத் தொடங்கினேன். உரையாடலின் ஒவ்வொரு பகுதியும் நெஞ்சை உலுக்கி எடுத்தது. கல்வி குறித்த புதிய வெளிச்சத்தைத் தந்தது. சமூக மனிதனாக வாழ்வது என்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்தியது. உரையாடல் பதிவு தொடங்கி நூல் வடிவம் பெற சுமார் மூன்று வருடங்களாகியுள்ளது. இந்த நூல் எழுதி, அச்சுப் பிழைகள் சரிபார்க்கப்பட்ட மூன்றாவது நாளில் அதாவது 1990ல் மைல்ஸ் ஹார்ட்டன் தனது 85 வயதில் இறக்கிறார். நூல் வெளிவந்து ஏழாவது ஆண்டில் தனது 75வது வயதில் பாவ்லோ பிரெய்ரி இறக்கிறார். இருவரின் இறுதி வாக்குமூலமாகவே இந்த நூலை பார்க்க வேண்டும்.