Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 231p.; ills. 22 cm. |
Product Weight | 300 gms. |
Shipping Charges(USD) |
History of Thiruvarur = கோவில் தல வரலாறு திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கட்டப்பட்ட காலம் வரையறுக்கப்படவில்லை. தமிழகத்தை ஆண்ட புகழ்பெற்ற மன்னர்கள் அனைவரின் கை வண்ணமும், கல்வெட்டுகளும் இத்திருக்கோயிலில் அமையப்பெற்று விளங்குகின்றன. கோயிலின் பழமை பற்றி நாவுக்கரசர் திருவினாள் ஓர் பாகம் சேர்வதற்கு முன்னோ பின்னோ தில்லை அம்பலத்துள் ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோவிலாக கொண்ட நாளே என பாடியுள்ளார். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ, சமய குறவர் நால்வராலும் பாடப் பெற்றது. 330 தேவாரப் பாடல்களும், திருவாசகம் பாடல்களும் உள்ளன. இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு பெரிய புராணம், பன்னிரு திருமுறைகளில் நெடுகிலும் போற்றி பாடப்பட்டு உள்ளது. அருண கிரிநாதர் சங்கீத மும்மூர்த்திகள், தியாகையர் முத்துசாமி தீட்சதர் சியாமா சாஸ்திரிகள் முதலியாராலும் கயிலை ஞானப்பிரகாசர், குரு ஞானசம்பந்தர், இரட்டைப்புலவர், அந்தகண் வீரராக முதலியார் மாமன்னர் சகாஜி வள்ளலார் ராமலிங்க அடிகளாலும் கலம்பகம் பிள்ளை தமிழ் குறிஞ்சி போன்ற மற்றும் எண்ணிறந்த தமிழ் இலக்கியங்களிலும் இவ்வாலயம் போற்றி பாடி சிறப்பிக்க பெற்றுள்ளது. இது தவிர தெலுங்கு, மராட்டி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் பல இலக்கியங்கள் இவ்வூரை பற்றி உள்ளன.