Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2016 |
Bib. Info | 296p. ; ills. 22 cm. |
Product Weight | 350 gms. |
Shipping Charges(USD) |
இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தபின் கம்யூனிஸ்ட் கட்சியை அன்றைய காங்கிரஸ் அரசு தடைசெய்து, கம்யூனிஸ்டுகள் மீது சதி வழக்குகளைப் போட்டனர். அப்படிப் போடப்பட்ட நெல்லை சதி வழக்கில் சிறை வாழ்ந்தவர் தோழர் நெல்லை ஆர். நல்லக்கண்ணு. அப்போது அவரோடு சிறை வாழ்ந்தவர்களில் நானும் தோழர் நல்லக்கண்ணு மட்டும்தான் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தோழர் ஆர். நல்லக்கண்ணு எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். தியாகி பூதலபுரம் ஆர். வேலுச்சாமித் தேவர் மறைந்த போது 'ஜனசக்தி' பத்திரிக்கையில் அவரைப் பற்றி தோழர் ஆர். நல்லக்கண்ணு எழுதிய கட்டுரையும், பூதலபுரம் கிராமத்தில் ஆர். வேலுச்சாமித் தேவருக்குக் கட்டப்பட்ட மணிமண்டபத்தைத் திறந்து வைத்து தோழர் நல்லக்கண்ணு பேசியதும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தக் கட்டுரைகளைப் படித்து முடித்தபோது என் கண்கள் கலங்கிவிட்டன. அந்தக் கால நினைவுகள் என்னுள் அணிவகுத்தன.