Country | |
Publisher | |
ISBN | 9789387333512 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Bib. Info | 32p |
Categories | Children Books |
Shipping Charges(USD) |
மிகவும் தாமதமாகத்தான் பால் பற்றிய பல கேள்விகள் எனக்கு உருவாயின. ஆங்கில மருத்துவத்தில் ஆய்வுக்கூடத்தில் பணி புரிந்தபோது அறிமுகமான இயற்கை மருத்துவர்கள், இயற்கை மருத்துவ புத்தகங்கள் எனக்குள் பால் பற்றிய கேள்விகளை உருவாக்கியிருந்தன. 2002 இறுதியில் ஹீலர் போஸின் அறிமுகம் கிடைத்தபோது அவர் அங்கு சிகிச்சைக்குவரும் அனைத்து நோயாளிகளுக்கும் பால் பயன்படுத்த தடைவிதிப்பார். பால் குடிக்கும் நபர்களின் உடல்நிலையைவிட பாலை நிறுத்திவிட்ட பிறகு ஏற்படும் உடல்நலம் தனித்த தன்மையோடு இருப்பதைப் பார்க்க முடிந்தது. என் உடலின் அடிப்படை நோய்களுக்கான காரணங்கள் பாலில் துவங்கியிருப்பதை மிகத் தாமதமாகப் புரிந்துகொண்டு பால் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தினேன். உடல் மிக வேகமாக இயல்புக்குத் திரும்புவதை உணர முடிந்தது. •