Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Categories | Children Books |
Shipping Charges(USD) |
குழந்தைகள் யாரையும் கரைக்கும் யாரோடும் கரைந்து கொள்ளும் இசையாகவும், தர்க்கங்களுக்குள் நிற்காத இயல்பு கொண்ட புதிரான கவிதையாகவும் இருக்கிறார்கள். நிறைய வரையறைகளை மனதிற்குள் நிரப்பிக்கொண்ட நமக்குக் குழந்தைகளின் நெகிழ்வும் கதகதப்பும் கொண்ட மன இயல்பை ஏற்றுக்கொள்வது கடினமாகவும் நிராகரிப்பது எளிதாகவும் இருக்கிறது. இது அப்படியே இருக்கும் நிலையிலேயே நமக்குக் குழந்தைகளை வடிவமைக்கவும் அவர்களது அகச்சிக்கல்களுக்கு தீர்வு சொல்லவும் தோன்றுகிறது. குழந்தைகளோடு பிணைந்துகொள்ளும் மனம் கிடைப்பது என்பது நாம் அவர்களது மனஅசைவுகளை இயல்பான மௌனத்தோடு கவனிப்பவர்களாகவதில் இருக்கிறது. குழந்தைகளின் மனஅசைவுகள் நிறைந்த இந்த படைப்புகள் நமக்குள் இருக்கும் குழந்தைகளுக்கான ஒருவரை நிறம்பெறச்செய்யும்.