Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Categories | Environmental/Ecological Studies |
Shipping Charges(USD) |
தண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்னையாக எழும்போது நதிகள் இணைப்பை மாயவார்த்தையாக சில மேலோட்டவாதிகளும், அரசியல்வாதிகளும் பேசுவதை பார்த்திருப்போம். நதிநீர் இணைப்பு ஒன்றே தண்ணீர் பஞ்சத்துக்கான தீர்வு என்று சமூக வலைதளங்களில்கூட எந்தவித அடிப்படை ஆராய்ச்சியும் இல்லாமல் சிலர் தகவல்களை பகிர்வதையும் நாம் கடந்து வந்திருப்போம். உண்மையில் நதிநீர் இணைப்பு இந்திய தேசத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்குமா? உண்மையில் அதற்கான தேவை இருக்கிறதா? நதிநீர் இணைப்பு என்பது செலவீனமிக்க திட்டமாகவே கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நிலம், காடு, பல்லுயிர்த்தன்மை, ஆறுகள், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களை அவர்களுடைய வாழிடங்களிலிருந்து வெளியேற வைக்கும் திட்டமாகும்.