Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Categories | Environmental/Ecological Studies |
Shipping Charges(USD) |
ஆரோக்கியமான நீர்ப்படுகைகளும், தூயநீர் சுழற்சி முறைகளும் இயற்கையாகவே இயங்குவதைச் சாதகமாக்கிக்கொண்டு, நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நீரைச் சுத்திகரிக்கவும், பசியைப் போக்கவும், வெள்ள அபாயங்களைத் தடுக்கவும் முடியும். இப்போதுள்ள திட்டங்களில் சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்வதன் மூலம் சமூகத்தின் பிற தேவைகளை மிகக் குறைவான செலவிலேயே எளிதாக நிறைவேற்றவும் முடியும். சந்தையில் கிடைக்கும் ஒரு பொருளுக்கு மூலமதிப்பு அதைப்பண்டமாக மாற்றுவதற்கான உழைப்பு மதிப்பு, போக்குவரத்திற்கான விலை, விற்போருக்கான விலை, இவற்றை வைப்பதுபோல் சூழலியல் சேவைக்கான மதிப்பை வைத்து, அந்தப்பங்கை சூழலியலுக்கு திருப்பிச் செலுத்துவதில்லை. எனவே, அரசுகள் சூழலியல் மதிப்பை உணருவதில்லை. ஆகையால் அதி விரைவான வேகத்தில் இயற்கைச்சூழல் சீரழிந்து, ஒட்டு மொத்த சமூகத்தின் தேவைகள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.