Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Categories | Environmental/Ecological Studies |
Shipping Charges(USD) |
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் "நீரின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நீர் நிலைகள் அவ்வளவு தூய்மையாக மிளிர்கின்றன. காரணம் அந்நாட்டில் சாயப்பட்டறைகளோ தோல்பதனிடும் ஆலைகளோ கிடையாது. தமக்குத் தேவையான ஆடைகளையும் காலணிகளையும் அந்நாடு இறக்குமதி மட்டுமே செய்து கொள்கிறது. பின்ஏன் அது நீரின் நகரமாக இருக்காது? வளர்ந்த நாடுகள் நீரை மாசாக்கும் தொழில்களை நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தலையில் கட்டிவிட்டு மறைநீர் இறக்குமதியை மேற்கொள்கின்றன. இதனால்தான் ஒரு காலத்தில் 34 சிற்றாறுகளும் 120 கால்வாய்களும் இணைந்து ஓடிய நம் நொய்யல் இன்று நைந்து கிடக்கிறது.