Country | |
Publisher | |
ISBN | 9788184939224 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 184p.; |
Categories | Politics/Current Affairs |
Shipping Charges(USD) |
வியக்க வைக்கும் வரலாற்று உண்மைகள். அனல் பறக்கும் அரசியல் விவாதங்கள். எவருக்கும் அஞ்சாத கூர்மையான விமரிசனங்கள். தமிழகத்தின் எதிர்காலம்மீது அக்கறை கொண்டிருக்கும் அனைவரும் வாசிக்கவேண்டிய, விவாதிக்கவேண்டிய முக்கியமான நூல். கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்துவருகிறார்கள். இந்தச் சூழலில், முதல்முறையாக தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் வெற்றிடம் உருவாகியிருக்கிறது. இந்த வெற்றிடத்தை யார் நிரப்பப்போகிறார்கள்? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடிச் செல்லும் இந்நூல் 1967 தொடங்கி இன்று வரையிலான தமிழக அரசியல் நிலவரத்தை உள்ளது உள்ளபடி ஆராய்கிறது. தமிழகம் இன்று மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருப்பதற்கும் எண்ணற்ற பல பிரச்னைகளோடு தவித்துக்கொண்டிருப்பதற்கும் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி, இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை பலரும் காரணம் என்பதை வலுவான வாதங்களோடு ஆணியடித்தாற்போல் நிறுவுகிறார் நூலாசிரியர் மருத்துவர் சுதாமன்.