Country | |
Publisher | |
ISBN | 9789386737526 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Bib. Info | 160 p |
Shipping Charges(USD) |
உண்மையில் இளைப்பது அத்தனை சுலபமல்ல. சீரான ஒரு டயட் திட்டம் வேண்டும். அதைக் கடைப்பிடிக்க ராணுவக் கட்டுப்பாடும் சமரசமற்ற ஒழுங்கும் கைகூடவேண்டும். இவை சாத்தியமானால் மட்டுமே இளைக்க முடியும். இந்த இரண்டையும் சாத்தியப்படுத்துவது எப்படி என்பதைத் தனக்கே உரிய வசீகரமான நடையில் விவரிக்கிறார் பா. ராகவன். விரிவான தேடல்கள், வியக்க வைக்கும் பரிசோதனைகள் ஆகியவற்றின்மூலம் தான் கண்டடைந்த டயட்டையும் அதைக் கடைப்பிடித்த அனுபவங்களையும் ரசிக்கவைக்கும் முறையில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் பாரா. நிரூபிக்கப்பட்ட அறிவியல்பூர்வமான முறை என்றாலும் அதீத அறிவியல் பிரயோகங்களோ நடைமுறை சாத்தியமற்ற குறிப்புகளோ இதில் இல்லை. மாறாக, எப்படி அவரவருக்கான டயட்டை வகுத்துக்கொள்வது, எப்படிப் பின்பற்றுவது என்பதை எளிய அழகுத் தமிழில் விவரிக்கிறது இப்புத்தகம். சுவையையும் இழக்காமல் நமக்குப் பழக்கப்பட்டுப்போன உணவையும் கைவிடாமல் உடலை மட்டும் இளைக்க வைப்பது சாத்தியமே என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் அழுத்தமாக வாதிடும் இந்நூல், ஆரோக்கியத்தின்மீது அக்கறை கொண்டிருக்கும் அனைவரிடமும் இருக்கவேண்டிய ஒன்று.