'டுரியானுள் பலாச்சுளை' நூல் வழக்கமான சிங்கப்பூர் கதைகள் அல்ல. இன்றைய நவீன வாழ்க்கையை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. வெறும் புற உலக மாற்றங்களை அல்ல, அக உலகின் அலைகளை. சம்பிரதாயமான கதை முடிவுகளை நிராகரிக்கிறார் அன்பழகன். உளவியல் ரீதியாக மனிதர்களின் எண்ண அணுகுவது, அவற்றை மிகை உணர்வின்றிச் சொல்வது, நிகழ்வுகளைக் காட்சிகளாக அமைப்பது என்பது அன்பழகனின் தனிப் பாணி. —எழுத்தாளர் மாலன்