கலைஞர் : ஓர் சகாப்தத்தின் வரலாறு = Kalaiñar : ōr Cakāptattiṇ Varalāru

Author :  பாலபாரதி = PālaPārati

Product Details

Country
India
Publisher
நக்கீரன் வெளியீடு, சென்னை = Nakkīraṇ Veḷiyīṭu, Ceṇṇai
ISBN 9789385125553
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 104p.; ills. 22 cm.
Product Weight 170 gms.
Shipping Charges(USD)

Product Description

Biography இன்றைய நாகை மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3 அன்று முத்துவேலர் – அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி. சாதிரீதியாக பெரும் தாக்குதலை எதிர்கொண்ட ஒரு சமூகத்தில் பிறந்த கருணாநிதி, நாட்டிலேயே அதிகபட்சமாக 60 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதும் தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் அதிக நாள் முதல்வராக இருந்தார் என்பதும் சாதி ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஜனநாயகத்தில் பெரும் ஆச்சரியங்களில் ஒன்று. இளவயதில் திருவாரூரில் பள்ளிக்கூடத்தில் சேரச் சென்றபோது தலைமையாசிரியர் கஸ்தூரி ஐயங்கார், “இடமில்லை” என்று சொல்லிவிட, “பள்ளியில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் கமலாலயம் தெப்பக்குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வேன்” என்று சொல்லி பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தவர் கருணாநிதி. இந்தப் போராட்டக் குணம்தான் அவரை காலம் முழுமைக்கும் உயரங்களுக்கு இட்டுச் செல்லும் வாகனமாக இருந்தது.

Product added to Cart
Copied