Country | |
Publisher | |
ISBN | 9788195383009 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 287p.; 22 cm. |
Categories | Sociology/Culture Studies |
Product Weight | 440 gms. |
Shipping Charges(USD) |
"நீ என்ன சாதி...? இந்தக் கேள்வியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நுட்பமாகவோ, நுணுக்கமாகவோ சந்திக்காத ஒரு இந்துவை நீங்கள் எங்கேயாவது சந்தித்தது உண்டா? தம்பிக்கு எந்த ஊர். என்ன பெயர் என்பது போல என்ன சாதி என்பது இயல்பான எளிதானக் கேள்வி அல்ல. அது ஒரு துலாக்கோல். ஒரு இந்துவின் ஆதி அந்தமும் சாதி எனும் துலாக்கோல் கொண்டு எடை பார்த்து அவனது சமூகப் படிநிலையைக் கணக்கிட்டு, அவனை நட்பாக்கிக் கொள்வதா அல்லது தூரத்தில் நிறுத்துவதா என்பதை அந்தக் கேள்விக்குக் கிடைக்கும் விடையே தீர்மானிக்கிறது. எதிரே நிற்பவனின் சாதியைப் பொறுத்து அந்தக் கேள்வி அடுத்த வடிவம் எடுக்கிறது. பட்டியல் இனமாக இருந்தால் அந்தக் கேள்வியே அவனை சாய்த்து விடுகிறது. ஒரு மந்திரக் கயிறால் கட்டிப் போட்டது போன்ற நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான். நாம் சாதி பற்றி அறியாதவராக, சாதிப் பெருமைப் பற்றி பேசாதவராக, அதைப் புறக்கணிப்பவராக இருந்தாலும், சாதி நமக்குள் திணிக்கப்படுகிறது. நாம் மனிதனாக வாழ நினைத்தாலும் சாதி நம்மை விடுவதாயில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு இந்து என்பவன் ஒரு சாதியின் அடையாளத்துடன் தான் இந்த சமூகத்துக்குள் உலவ வேண்டி வருகிறது..."