image description
# 841969
USD 13.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

வளம் தரும் நெல்லி = Vaḷam Tarum Nelli

Author :  கே.எஸ்.சண்முகம் = Kē.Es. Caṇmukam

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை = Niyū Ceñcuri Puk Havus (p) Liṭ, Ceṇṇai
ISBN 9788123443898
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 205p.; 22cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

சீர்மிகு நெல்லிப் பயிரை சிறப்பாகச் சாகுபடி செய்வதற்கு உதவும் வகையில் ‘வளம் தரும் நெல்லி எனும் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முழுநூலில், நெல்லிப் பயிரை வெற்றிகரமாக சாகுபடி செய்வதற்கான அதிநவீன அறிவியல் தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்முறை தொழில்நுட்பங்கள் யாவும் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய நெல்லி ரகங்கள். மண் மேலாண்மை. பாசன மேலாண்மை, உர மேலாண்மை, சொட்டுநீர் பாசனம். ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு. அறுவடை முறைகள், அறுவடை பின்சார் முறைகள். மதிப்புக் கூட்டுதல் ஆகியவை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளது. நெல்லி, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. குறைந்த நீர்த் தேவை கொண்டது. வளங்குறைந்த வறண்ட நிலங்களில் பயிரிடுவதற்கு ஏற்றது. இதை மானாவாரிப் பயிராகவும், பாசனப் பயிராகவும் பயிரிடலாம். நெல்லி. சாகுபடி சிரமம் குறைந்தது. செலவு குறைந்தது. நெல்லி சாகுபடிக்கு அரசு மானியம் அளிக்கப்படுகிறது. இது சிறு, குறு விவசாயிகளுக்கு சாலச் சிறந்தது. முதல் மூன்று ஆண்டுகள் நெல்லிப் பயிரை முறையாகப் பராமரித்துவிட்டால் போதும். அதற்குப் பிறகு அது தானாகவே தன்னைப் பராமரித்துக்கொள்ளும். மூன்றாம் ஆண்டு முடிவில் காய்ப்புக்கு வந்துவிடும். ஐம்பது ஆண்டுகள் வரை காய்த்துக்கொண்டிருக்கும். நெல்லி நல்லதொரு பணப்பயிர். இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்படும் நெல்லிக் காய்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. அவைகளுக்கு கூடுதல் விலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

Product added to Cart
Copied