image description
# 842545
USD 19.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

செம்பா: கனவு தேடிக் கரை கடந்தவள் = Cempā: Kaṇavu Tēṭik Karai Kaṭantavaḷ

Author :  மாயா = Māyā

Product Details

Country
India
Publisher
வானதி பதிப்பகம், சென்னை = Vāṇati Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 372p.; 22 cm.
Product Weight 450 gms.
Shipping Charges(USD)

Product Description

Historical Novel உலக வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். அன்றைய உலகின் பல திசைகளிலும் கரையிறங்கிப் பரவத் தொடங்கியிருந்தான் தமிழன். சங்க காலமென நம் இலக்கியங்கள் சுட்டும் காலத்தின் மையப்புள்ளி. அப்படியானதொரு காலத்தின் ஒரு துளியாய் வருகிறது நம் கதை. செம்பாவின் கதை வரலாறல்ல. வரலாறென்பது கல்லில் பொறித்ததுபோல தெளிவான சான்றுடையதாக இருக்க வேண்டும். ஆனால், செம்பாவின் கதை கல்லில் வடிக்கப்பெறவில்லை. அது காற்றில் வரையப்பட்டிருக்கிறது. அது பன்னெடுங்காலமாய் மூச்சிலும் பேச்சிலும் கலாசாரப் பண்பாட்டு வடிவங்களிலும் அடைபட்டு அரூபமாய் திரிந்தலையும் கதைகளுள் ஒன்று. தமிழ் நிலத்துக்கும் கொரிய தீபகற்பத்துக்குமான உறவைப் பறைசாற்றும் வலிமை இன்னும் அதற்குக் கைகூடவில்லை. ஆனால், அதைச் சாத்தியப்படுத்தத் தேவையான நூலிழைகள் அத்தனையும் நம்மைச் சுற்றியே திரிகின்றன. அவற்றைச் சேகரித்து, சான்று நெய்யும் வேலையில் முதல் தறிக்கோலைக் கையிலெடுத்திருக்கிறேன். இது இப்படித்தான் நடந்ததென்ற தெளிவுமில்லை, இப்படி நடந்திருக்கலாமென்ற அனுமானமுமில்லை, இப்படி நடந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே. கற்பனையை விஞ்சும் இந்தக் கதையின் உண்மை வேரைத் தேட வாசகரைத் தூண்டுவதே எம் நோக்கம். திறந்த மனதோடு வாருங்கள்.

Product added to Cart
Copied