அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர்

Author :  ம.வெங்கடேசன்

Product Details

Country
India
Publisher
சுவாசம் பதிப்பகம்
ISBN 9789395272063
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 144p.; ills. 22 cm.
Categories Biography/Memoirs
Shipping Charges(USD)

Product Description

எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது. தனது ஆன்மிக நிலைப்பாட்டை என்றுமே எம்ஜிஆர் மறைத்ததில்லை என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, எம்ஜிஆரால் மிகவும் மதிக்கப்பட்ட ஈவெராவின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியதே இல்லை என்பதையும் உறுதிபடச் சொல்கிறது. எம்ஜிஆரின் அரசியல் ஆன்மிகச் செயல்பாடுகளை விளக்கும் இப்புத்தகம், அதற்கு இணையாக, அக்காலக் கட்டத்தின் அரசியல் சித்திரம் ஒன்றையும் சேர்த்துத் தருகிறது. காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற துறவிகளை ஆதரிப்பதால் தனக்கு வரும் முத்திரைகளைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாதவர் எம்ஜிஆர். தனக்கிருக்கும் ஆன்மிக நம்பிக்கைகளைப் பலமுறை உரக்கச் சொன்னவர் அவர். பல புத்தகங்களைத் தேடிப் படித்து, ஆய்வு செய்து, தன் வாதங்களுக்கு வலுவான நிரூபணங்களுடன் இந்த நூலை எழுதி இருக்கிறார் ம.வெங்கடேசன்.

Product added to Cart
Copied