Country | |
Publisher | |
ISBN | 9789393361165 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 153p.; 22 cm. |
Categories | Sociology/Culture Studies |
Product Weight | 250 gms. |
Shipping Charges(USD) |
சுயமரியாதைக் கோட்பாட்டைப் பின்னாளில் பெரியார் பின்பற்றியதால், "நியாயப்படி அயோத்திதாசப் பண்டிதர்தான் சுயமரியாதைத் தலைவர்" எனத் "தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படைத் தலைவரான பாலகுரு சிவத்தின் பேச்சு திராவிடன் பத்திரிகையிலேயே வெளியானதால் திராவிட இயக்கம் அந்த நியாயத்தை ஒப்புக்கொண்டது தெளிவு. ஆதிதிராவிடத்திலிருந்து திராவிடம் பரிணமித்ததால் முன்னதும் பின்னதும் ஒன்று மற்றொன்றுக்குப் பக்கப் பலமாய் இயல்பாய் இணங்கி இயங்கின. மதவாதத்தைச் சுட்டுவதற்கு சமகாலத்தில் பயன்படுத்தும் "தீவிரவாதம், தீவிரவாதி" என்ற சொற்களுக்கான “Terrorizing, terrorists" என்ற ஆங்கிலச் சொற்களால் ஜாதிவெறியர்களை இரட்டைமலை சீனிவாசனும் ஆர். வீரையனும் குறிப்பிட்டனர்.