image description
# 850185
USD 100.00 (No Stock)

நபித் தோழர்கள் வரலாறு! (நான்கு பாகங்கள்)

Author :  மெஹர் ப.யூ.அய்யூப்

Product Details

Country
India
Publisher
ரஹ்மத் பதிப்பகம்
Format PaperBack
Language Tamil
Year of Publication 2023
Bib. Info 1719p,
Categories Islam
Shipping Charges(USD)

Product Description

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு விரிவுரையுடன் 10 பாகங்கள், இறைத்தூதரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியன அடங்கிய ஹதீஸ் மொழிபெயர்ப்பு 35 பாகங்கள், இஸ்லாமிய வரலாறு 6 பாகங்கள், நபிகள் நாயகம் வரலாற்றைத் தொடர்ந்து இறைத்தூதரின் உற்ற தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான்(ரலி), அலீ (ரலி) ஆகிய நால்வரின் வரலாற்றை வெளிக்கொணர்ந்திருக்கிறது ரஹ்மத் பதிப்பகம். இஸ்லாமிய சிந்தனையாளர்கள் திருக்குர் ஆனுக்கும், ஹதீஸுக்கும் அடுத்தபடியாகப் போற்றி மகிழ்வது நபித் தோழர்களின் வரலாறுகள். அவர்கள் நால்வரையும் முறையே அதிசயத் தோழர், உன்னத ஆளுநர், ஒப்பற்ற வள்ளல், அறிவின் நுழைவாயில் என்று அடையாளப்படுத்திய பெருமை "கவிக்கோ' அப்துல் ரஹ்மானைச் சாரும். மொழிபெயர்ப்புத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஈடுபட்டு, ஏறத்தாழ அரை லட்சத்துக்கும் அதிகமான பக்கங்களை மொழிபெயர்த்திருக்கும் பெருமை ரஹ்மத் பதிப்பகத்துக்கு உண்டு. ஆதாரபூர்வமான மூலநூல்களை அடிப்படையாகக் கொண்டு அவை வெளியிடப்படுகின்றன. நபித் தோழர்கள் நால்வரின் வரலாறும் சென்னை புதுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த மெஹர் ப.யூ. அய்யூப்பால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், திறனாய்வாளர் என்கிற பெருமைகளுக்கு உரித்தான அவரது மொழியாக்கம், நல்ல தமிழில் அரபி வார்த்தைகளை முல்லைச் சரம் தொடுத்தாற்போல இணைத்து வழங்கியிருப்பது தனிச் சிறப்பு.

Product added to Cart
Copied