| Country | |
| Publisher | |
| ISBN | 9789389182828 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 204 p |
| Categories | Reference |
| Shipping Charges(USD) |
“ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுகிறது. புனைவென்பது உண்மைக்கு நெருக்கமானது எனுமளவிற்கு இலக்கியம், வரலாறு, அறிவியல் சார்ந்த தரவுகள் மட்டுமல்லாமல் நாம் இதுவரை அறியாத புதிய செய்திகளையும் கொண்டு வந்து நாவலில் இணைத்திருக்கிறார். ஒரு நாவல் எழுத அவர் மெனக்கெட்டிருக்கிற உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.