| Country | |
| Publisher | |
| ISBN | 9788119919796 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 347 p.; 23 cm. |
| Categories | Communication/Journalism |
| Product Weight | 500 gms. |
| Shipping Charges(USD) |
அண்மையில் 'தமிழ்தழியல்' வரலாறு குறித்து நண்பர் திரு.மா.சு. சம்பந்தம் அருமையான நூல் ஒன்றைச் சிறப்பாக எழுதி வெளியிட்டிருக்கிறார். எப்பொருள் குறித்தும் திரு.சம்பந்தம் அவர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தால் மிக நுட்பமாக ஆராய்ந்து திட்ட வட்டமாகத் தம் கருத்தை வெளியிடுவதில் ஆற்றல் மிக்கவர். இவர் தமிழில் இதழியல் தோன்றி வளர்ந்த வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து நிரல்பட ஒழுங்காக எழுதி வெளியிட்டிருக்கிறார். இவருடைய நோக்கும் போக்கும் தனித்தன்மை வாய்ந்தவை. செய்தி இதழ்கள், பொது நோக்குள்ள இதழ்கள், சாதி, சமய இதழ்கள் எனப்பல துறை இதழ்கள் பற்றியும் விரிவாகத் தெரிவித்திருக்கிறார் இவர். தமிழில் பத்திரிகைத்துறை தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நண்பர் திரு. சம்பந்தம் எழுதிவெளியிட்டுள்ள இந்நூலைப் படித்துப் பார்த்தாலே போதும். பயன் மிகவுள்ள இந்நூலைத் தமிழ் மக்கள் படித்துப் பயன் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.